முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      தமிழகம்
gold 2024-01-04

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் நேற்று 9-வது நாளை எட்டிய நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்து விற்பனையானது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,235-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.55 என குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நேற்று தங்கம் விலை ஏற்றம் கண்டது. நேற்று சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,075-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து