முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா? - இல்லை என்கிறது வங்கதேசம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      உலகம்
mohammad-yunus

Source: provided

டாக்கா : இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்கீஸ்தான் உடன் கூட்டணி இல்லை என்று வங்கதேசம் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை என்று சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் குன்மிங்கில் சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த ஜூன் 19ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த 3 அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு முரண்பாடு இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்து வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், ' சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை அரசியல் தொடர்பானது அல்ல. அதிகாரிகள் அளவிலானது மட்டுமே. இந்த சந்திப்பில் கூட்டணி வைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. நாங்கள் யாருடனும் எந்த கூட்டணியும் அமைக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நோக்கத்தில் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்பதை உறுதியளிக்கிறேன்,' எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து