முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படிக்கட்டுகளில் சாகசம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:  பொதுப் பேருந்துகளில் புத்தகப்பை, உணவுப்பைகளுடன் செல்லும் போது பேருந்தில் கூட்ட நெருக்கடியில் சிக்கி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். இதனால்  அவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர்.  எனவே  பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவிகளுக்காக மட்டும் தனி பேருந்து இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு நேற்று  விசாரித்தது. பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு அதிக கடமை உள்ளது. தற்போது பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் புகைப்பழக்கம், மது, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகி வருவது அதிகமாக உள்ளது. மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும் அளவில் நிலைமை உள்ளது.

பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. ஓட்டுநர், நடத்துநர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்காமல் சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குகின்றனர். படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின் படி தண்டனைக்குரிய குற்றம். படிக்கட்டில் பயணிப்பவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு கூட செய்யலாம். எனவே, பயணத்தின் போது மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதையும் மீறி சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து