முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: ஒடிசாவில் இன்று கோலாகல விழா

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      ஆன்மிகம்
Puri-Jagannathr 2023 06 20

புவனேஸ்வர், ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமான பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். இந்த விழா 9 நாட்கள் நடைபெறும். 

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று (27.6.2025) தொடங்குகிறது. இதற்காக தேர்கள் உருவாக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். 

ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரில் முதல் முறையாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு சவாலை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் முதல் முறையாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  கடற்கரை பகுதிகளில் மாநில கடலோர காவல் படை, கடற்படை குழுக்களுடன் முழு அளவில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி நடைபெறும். பூரி நகரம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ரத யாத்திரை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து