முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு: விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      இந்தியா
Air-India 1

Source: provided

டெல்லி : டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் உள்ள ஏர் இந்தியா விமானத்தின் கேபினில் ஒரு டிஷ்யூ பேப்பரை குழுவினர் கண்டுபிடித்தனர். அதில் "ஏர் இந்தியா 2948-ல் வெடிகுண்டு உள்ளது" என்று எழுதப்பட்டிருப்பதைக் கவனித்த குழுவினர், உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விமானம் தனிமைப்படுத்தப்பட்டு மாற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் முழுமையான சோதனை நடத்தினர். பயணிகளின் சாமான்களுடன் விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

சில மணிநேர சோதனையில் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் மூலம், மிரட்டல் போலியானது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், டிஷ்யூ பேப்பரில் செய்தியை எழுதியது யார் என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து