முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை சந்தித்து நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
Ma Subramani

Source: provided

சென்னை:  நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 'இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48' திட்டத்தில், 4 இலட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். 

பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் 2021 டிசம்பர் திங்கள் 18ஆம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட அடிக்கடி விபத்துகள் நேர்கின்ற மருத்துவமனைகளாக தேர்ந்தெடுத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, விபத்து நேர்ந்தவுடன், 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் இந்த இடத்திற்கு சென்றடைந்து, அவசர மருத்துவ தொழில்நுட்பவியர்களின் உதவியுடன் காயமுற்றவர்களின் உயிர்களை காப்பதற்குரிய முதலுதவிகளை செய்து மருத்துவ உதவிகளை ஆம்புலன்ஸ் வழங்கி உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கின்ற இந்த மகத்தான திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றபிறகு இதுவரை 3,99,999 என்கின்ற வகையில் ஏறத்தாழ 4 லட்சமாவது பயனாளி ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.  அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவருக்கான மருத்துவ செலவை இந்த அரசு ஏற்றுக் கொள்கிறது என்கின்ற செய்தியினை சொல்லியிருக்கிறோம் .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர்  ப.செந்தில்குமார்,  தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினீத்,  ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலுவலர் மரு.தனவேல்,  (ஓய்வு), முதல்வர் மரு.சீனிவாசாராஜ், இணை இயக்குநர் மரு.ரவிபாபு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து