முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      சினிமா
Mrs- -Mr -Movie 2025-07-14

Source: provided

வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.  40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், கர்ப்பமாவதற்கான அனைத்து முயற்சிகளிலும் வனிதா ஈடுபட்டு வருகிறார். அதன்படி வனிதா கர்ப்பமாகி விட, ராபர்ட்டுக்கு தெரிந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள தடையாக இருப்பார் என்று நினைத்து அவருக்கு தெரியாமல் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்து விடுகிறார். வனிதாவின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ராபர்ட், வனிதாவை தேடி இந்தியா வருகிறார். வனிதா ஆசைப்பட்டது போல் குழந்தை பெற்றுக் கொண்டாரா?, அவரது கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், 40 வயது பெண்மணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். நடன இயக்குநர் ராபர்ட், வனிதாவை காப்பாற்ற போராடும் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். வனிதாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆர்த்தி உள்ளிட்ட பலரும் படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. மூத்த நடிகர்கள் பட்டாளத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை கமர்ஷியல் படத்தை கொடுத்திருந்தாலும், அதை ரசிக்கும்படியாக கொடுக்க தவறியிருக்கிறார் மிசஸ் வனிதா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து