முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      சினிமா
Oh-My-Baby 2025-07-14

Source: provided

நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலிடம் உதவி இயக்குநரான ருத்ரா கதை செல்கிறார். அவர் சொல்லும் இரண்டு கதைகளில் ஈர்க்கப்படாத விஷ்ணு விஷால்,  காதல் கதையை எதிர்பார்க்கிறார். இதனால், தனது சொந்த காதல் கதையை அவரிடம் விவரிக்கிறார். அந்த கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்துப்போக, இரண்டாம் பாதியை சொல்லும்படி கேட்கிறார். காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலியை பிரிந்த ருத்ரா, தன் காதல் கதைக்கு முடிவு இல்லாமல் தடுமாறுகிறார். பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தெரிந்தால் மட்டுமே படம் பண்ணுவேன் என்று சொல்லும் விஷ்ணு விஷால், அதற்காக காதலியை மீண்டும் சந்திக்கும்படி ருத்ராவிடம் சொல்கிறார். பிரிந்து சென்ற காதலியை பல வருடங்களாக சந்திக்காத ருத்ரா, தன் பட வாய்ப்புக்காக மீண்டும் சந்தித்தாரா?, உடைந்த அவரது காதல் மீண்டும் ஒன்று சேர்ந்ததா என்பதற்கான விடையே ஓஹோ எந்தன் பேபி. நாயகனாக அறிமுகமாகியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா, பள்ளி, கல்லூரி, இளமை பருவம் என மூன்று காலக்கட்டங்களிலும் வயதுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார். 

நடிகராகவே வலம் வருகிறார் விஷ்ணு விஷால்.  நாயகி மிதிலா பால்கர் மற்றும் , இயக்குநர் மிஷ்கின், கருணாகரன் ஆகியோரது காட்சிகள் பாராட்டு பெருகிறது. ஜென் மார்டின் இசை அருமை. காதல் கதை என்றாலும், அதை ஒரு திரைப்படத்தின் பின்னணியில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், தற்போதைய தலைமுறையினர் காதல் உணர்வுகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து