முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.6,000-லிருந்து ரூ.15,000 ஆனது: பீகாரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்திய நிதிஷ்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
nitish-kumar

பாட்னா, பீகாரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை  ரூ.6,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “‘பீகார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின்’ கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 க்கு பதிலாக ரூ.15,000 வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, ‘பீகார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின்’ கீழ் ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர் இறந்தால், அவரின் மனைவிக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ரூ.3,000 க்கு பதிலாக ரூ.10,000 மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

 மேலும், “ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்து சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை செலுத்துகின்றனர். பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வு பெற்ற பிறகு கண்ணியத்துடன் வாழவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை பெரிய அளவில் உயர்த்தி கவனம் ஈர்த்துள்ளார் நிதிஷ்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து