முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்: சின்னசாமி மைதானத்துக்கு சிக்கல்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      விளையாட்டு
Chinnaswamy 2025-07-26

Source: provided

பெங்களூரு : ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான நிலையில், சம்பவத்துக்கு காரணமாக அமைந்த எம்.சின்னசாமி மைதானமானது பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

வெற்றிக் கொண்டாட்டம்...

நடப்பு ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி முதன்முறையாக கோப்பையை வென்றது. இதையொட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4ஆம் தேதியில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

11 போ் பலி...

மைதானத்தின் வாயில் மற்றும் சுற்றுப்புறத்தில் சுமாா் 3 லட்சம் ரசிகா்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட கா்நாடக அரசு, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தது. மேலும், இந்த அசம்பாவிதத்தை தடுக்க தவறியதாக பெங்களூரு நகர காவல் ஆணையா் உள்பட காவல்துறை அதிகாரிகள் சிலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

விசாரணை ஆணையம்... 

இந்த உயிரிழப்புகளுக்கு ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் கழகம், காவல்துறையினரின் ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என்று விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவித்தது. கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

பாதுகாப்பானது அல்ல...

கர்நாடக மாநில அரசிடம் டிகுன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்வுகள் நடத்த போதிய வசதிகள் இல்லாதது, பொது பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்துகளை ஏற்படுத்துவதாக கூறியதுடன், சின்னசாமி மைதானம் பாதுகாப்பானது அல்ல, தகுதியற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் இந்த அறிக்கையை அம்மாநில அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

நடத்தப்படுமா?... 

இதனிடையே, ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியின் தொடக்கம் மற்றும் இறுதிப் போட்டிகளும் சின்னசாமி மைதானத்தில் தான் நடத்தப்படவிருப்பதாக இருந்தது. ஆனால், தற்போது விசாரணைக் குழுவின் அறிக்கையால் ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகள் இடமாற்றம் செய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தாண்டு பிரீமியர் லீக் போட்டிகளும் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து