முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ன ஆச்சு பும்ராவுக்கு? - 173 பந்தில் 1 முறை மட்டுமே வேகமாக பந்துவீச்சு

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

மான்செஸ்டர் : மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசாதது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கி. முன்னிலை...

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது. தற்போது, 4-ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் (94 ரன்கள்), ஸாக் கிராலி (84 ரன்கள்), ஆலி போப் (71 ரன்கள்) எடுத்தனர்.

நொண்டிக்கொண்டே...

இந்த போட்டியில், பும்ரா களத்தில் நொண்டிக்கொண்டே இருந்த காட்சிகளும் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது. ஹெடிங்லே, லார்ட்ஸ் திடலில் வேகமாகப் பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா ஓல்ட் டிராஃபோர்டில் ஒரே முறை மட்டுமே 140கி.மீ./மணி வேகத்திற்கும் அதிகமாக பந்துவீசியது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே, பும்ராவுக்கு பணிச்சுமை இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இந்தப் போட்டி முக்கியமானது என்பதால் ஓய்வெடுக்காமல் விளையாடி வருகிறார்.

அதிர்ச்சி...

இந்தத் தொடரில் 140கி.மீ./மணி வேகத்திற்கும் அதிகமாக பும்ரா பந்துவீசிய விவரங்கள்

ஹெடிங்லே: 266 பந்தில் 106 முறை, 39.84 சதவிகிதம்

லார்ட்ஸ்: 257 பந்தில் 69 முறை, 26.84 சதவிகிதம்

ஓல்ட் டிராஃபோர்ட்: 173 பந்தில் 1 முறை, 0.57 சதவிகிதம்

படிப்படியாக பும்ராவின் வேகம் குறைந்துக்கொண்டே வரும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து