எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலா்கள் கூட்டத்தில் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத் திருட்டு” மற்றும் “சிறப்பு தீவிர திருத்தம்” நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பீகார் மாநிலத்தில் நடந்தது போல் இல்லாமல் தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தம் நியாயமாக நடைபெற்றால் அது நியாயமாக நடைபெற வேண்டும் என்றும் முதல்வர் வலியுறத்தினார்.
ஜனநாயகத்தைச் சிதைக்கும்....
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலா்கள் கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு., தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் - அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பிகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே “Mass deletion” இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
கைதுக்கு கடும் கண்டனம்....
குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் பிகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்தும், அகில இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பாஜகவின் “வாக்குத் திருட்டை” எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இன்டியா கூட்டணி எம்.பி.க்களைத் தடுத்து நிறுத்தி - அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு ஆணவப் போக்கை கடைப்பிடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நியாயமான முறையில்....
தேர்தலை நடத்துவது மட்டுமல்ல - அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தன்னாட்சிபெற்ற அமைப்பிடம் இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்திலேயே தேர்தல் ஆணையத்திற்கு முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் - தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு - தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு மத்திய பாஜக அரசுடன் கைகோத்து நிற்பதும் - பாஜகவின் தில்லுமுல்லுகளுக்குத் துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாக ஆக்குவதோடு கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
நிரூபிக்கும் ஆவணங்களாக....
இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை எதிர்த்து பாராளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜனநாயகத்தின் பாதுகாவலராகத் திகழும் தி.மு.க. தலைவரின் ஆணைக்கிணங்க, தி.மு.க.வின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 17.7.2025 அன்றே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து இறந்த வாக்காளர்களை நீக்குதல், பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக் கையேடுகளை வழங்குதல், அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல், “ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்யும் வேளையில் - தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
அனைவருக்கும் நன்றி...
தி.மு.க. தலைவர் கட்டளைப்படி ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து - உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. இந்தியத் தேர்தல் களத்தில் அசாதாரண மற்றும் ஆபத்தான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், கழகத் தலைவர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்ட கழக உறுப்பினர் சேர்க்கையான "ஓரணியில் தமிழ்நாடு" என்ற இயக்கம் - மக்கள் இயக்கமாக மாறி- இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக மாறியிருப்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மன மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறது.
முழுமையான ஆதரவு....
முற்போக்குத் திட்டங்களால் - ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமைக்கு பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒரு புறமும், பள்ளி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள் வரை இன்னொரு புறமும் முழுமையான ஆதரவுக் கரம் நீட்டுவதால் - மாணவர், இளைஞர், பெண்கள், முதியோர் என அத்தனை தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுத் திகழ்கிறார் ஸ்டாலின் என்பதை ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலமாக உணர முடிந்தது.
தி.மு.க.வே முதன்மை சக்தி....
தி.மு.க.வில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை - இப்போது மட்டுமல்ல - வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் - ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் தி.மு.க.வே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல - மதவெறி சக்திகளுக்கும் - அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது.
சேர்க்கையில் வெற்றி...
‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து - உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள், வீடுவீடாகச் சென்ற கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும் - பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-08-2025.
13 Aug 2025 -
தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தம் நியாயமாக நடைபெற வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
13 Aug 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க.
-
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் ஒருவர் கைது
13 Aug 2025தூத்துக்குடி, நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மைத்ரேயன்
13 Aug 2025சென்னை, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
துணைவேந்தர்கள் தேர்வு விவகாரம்: கவர்னருக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி, கேரள பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தர்களை நியமித்த கவர்னரின் முடிவுக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
-
கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
13 Aug 2025சென்னை, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
-
கூலி திரைப்படம் வெற்றிபெற ரஜினிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Aug 2025சென்னை, கூலி திரைப்படம் வெற்றி பெற நடிகர் ரஜினி காந்த்துக்கு இ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஆபரேசன் சிந்தூரின் போது பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டதா..? அமெரிக்கா பதில் அளிக்க மறுப்பு
13 Aug 2025ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கேள்விக்கு அமெரிக்க பதில் அளிக்க மறுத்து விட்டது.
-
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறை செல்வேன்: கர்நாடக எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
13 Aug 2025பெங்களூரு, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளேன் அதற்காகவும் நான் சிறைக்கு செல்லவும் நான் தயார் என்று கர்நாடக எம்.எல்.ஏ.
-
சற்றே குறைந்த தங்கம் விலை
13 Aug 2025சென்னை, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது.
-
உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் சந்திப்பு
13 Aug 2025புதுடெல்லி, உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
-
பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள்: மேயர் பிரியா பேட்டி
13 Aug 2025சென்னை, அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து மேயர் பிரியா விளக்கம்.
-
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்: வரிவிதிப்பு விவகாரத்தில் டிரம்ப்பை சந்திக்கிறார்
13 Aug 2025புதுடெல்லி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.
-
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
தமிழ்நாடு மத்திய பல்கலை., பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார்
13 Aug 2025திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்கிறார்.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தம் நியாயமாக நடைபெற வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
13 Aug 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு 2 மாணவர்கள் காயம்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
13 Aug 2025சென்னை, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுதது தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி : மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.
-
நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
13 Aug 2025வெல்லிங்டன் : நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
13 Aug 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 முறையாக கில்லுக்கு ஐ.சி.சி. விருது
13 Aug 2025துபாய் : ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
-
வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார் அமித்ஷா
13 Aug 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்
-
நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்கப்படும் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
13 Aug 2025டெல்லி : நடப்பு நிதியாண்டில் 10, 660 கி.மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.