முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்கப்படும் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

டெல்லி : நடப்பு நிதியாண்டில் 10, 660 கி.மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.மீ. வரை சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிலையான தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றத்துக்கான மாநாடு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 3 - 4 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், இணை அமைச்சர் அஜய் தம்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்கு உதவும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையானது நீடித்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்வது குறித்து அமைச்சர் அஜய் தம்தா பேசியதாவது, சுதந்திரமான ஆய்வுக் கூடங்கள், வழக்கமான தணிக்கைகளால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் மூலம் சாலை தரத்தை மேம்படுத்தும் பணிகளை அமைச்சகம் செய்து வருகிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் பிரிவு 3 ஜி - யின் படி, சாலை அமைப்பதற்கு நிலங்களை வழங்கியவர்களுக்கு 90% இழப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுவரும் சாலைப்பணிகளின் தரமும் ஒப்பந்ததாரர்களின் செயல்பாடுகளும் பரந்த ஆய்வின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தில்லி - மீரட், கிழக்கு புறவசி விரைவுச் சாலை, அகமதாபாத் - வதோதாரா நெடுஞ்சாலை என 8,391 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2,242 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை உள்பட 5,109 கி.மீ. விரைவுச் சாலைகள் அடங்கும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து