முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல சவால்களை எதிர்கொள்ளும் நமது அரசியலமைப்பு சட்டம் : சுதர்சன் ரெட்டி கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      இந்தியா
Sudarshan-Reddy-2025-08-22

Source: provided

புதுடெல்லி : நமது அரசியலமைப்பு சட்டம் பல சவால்களை எதிர்கொள்வதா துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுளஅள இன்டியா  கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் செப்​. 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

எதிர்க்​கட்​சிகளின் இன்டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்டு உள்​ளார். பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் நீதி​மன்​றங்​கள், உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணி​யாற்​றிய​போது அரசி​யலமைப்பு சட்​டத்தை காப்​பாற்ற அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றினேன் அந்த வேட்கை காரண​மாகவே தற்​போது குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் போட்​டி​யிடு​கிறேன். எனவே இந்த பயணம் எனக்கு புதிது கிடை​யாது.

பொருளா​தார பற்​றாக்​குறை குறித்து பல்​வேறு தரப்​பினரும் விவா​திக்​கின்​றனர். தற்​போது இந்​திய ஜனநாயகத்​தில் இது​போன்ற பிரச்​சினை எழுந்​திருக்​கிறது. நமது நாட்​டின் ஜனநாயகத்​தில் பற்​றாக்​குறை ஏற்​பட்​டிருக்​கிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வரு​கிறது. இதே​போல அரசி​யலமைப்பு சட்​டம், பல்​வேறு சவால்​களை எதிர்​கொண்டு வரு​கிறது. குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

இன்டியா கூட்​டணி சார்​பில் நான் போட்​டி​யிடு​கிறேன். உண்​மையை சொல்​வதென்​றால் இந்த தேர்​தல் எங்​கள் இரு​வருக்​கும் இடையி​லான போட்டி கிடை​யாது. இரு சித்​தாந்​தங்​களுக்கு இடையி​லான போட்டி ஆகும்.இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து