முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியின் 3 நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டிற்கு ஒப்பந்தம் : சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-2-2025-08-15

Source: provided

கொலோன் : தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜெர்மன், இங்கிலாந்து....

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது., தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரிலியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் களை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு  தமிழ்நாடு முதல்வர்  30.8.2025 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உற்சாக வரவேற்பு... 

ஜெர்மனி நாட்டின் டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த  முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே உள்ளிட்ட அலுவலர்கள் அன்புடன் வரவேற்றனர். மேலும், ஜெர்மனி வாழ் தமிழர்களும்  முதல்வர்  அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தமிழ்நாடு முதல்வர்  31.8.2025 அன்று ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

6250 நபர்களுக்கு...

அதன் தொடர்ச்சியாக, நேற்று (1.9.2025) டசெல்டோர்ஃப் நகரில் நார் பிரெம்ஸ்.நார்டெக்ஸ் குழுமம், இ.பி.எம்.-பாப்ஸ்ட் ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்  தமிழ்நாடு முதல்வர்  முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும்,  தமிழ்நாடு முதல்வர் , பி.எம்.டபுள்யூ குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

காஞ்சிபுரத்தில்...

ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்ட நார் பிரெம்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே கூறுகள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும்.

ரூ.1000 கோடி முதலீடு...

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நார் பிரெம்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா, துணைத் தலைவர் ஓலிவர் கிளக் ஆகியோர் கையெழுதிட்டனர்.  ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரைக் தலைமையகமாக கொண்ட குழும நிறுவனம், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் தமிழ்நாட்டின் தலைமையை வலுப்படுத்துகிறது.

மின்சார மோட்டார்கள்.... 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நார்டெக்ஸ் குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர். இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும். ஜெர்மனி நாட்டின் மல்ஃபிங்கன் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள இ.பி.எம். -பாப்ஸ்ட் நிறுவனம், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இது அதன் புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட காற்று இயக்க தீர்வுகளுக்கு உலகளவில் பெயர் பெற்றது. இந்நிறுவனம் மின்னணு ரீதியாக மாற்றப்பட்ட மோட்டார் தொழில்நுட்பத்தை முன்னோடியாகக் கொண்டு எச்.வி.ஏ.சி. , ஆட்டோமோட்டிவ், குளிர்பதனம் மற்றும் தொழில்துறை பொறியியல் போன்ற தொழில்களுக்கு சேவை ஆற்றுகிறது.

201 கோடி ரூபாய்.... 

இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இ.பி.எம். -பாப்ஸ்ட்  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் திரிபாதி கையெழுதிட்டார். இவ்வாறு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து