முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரம்: போலீஸ் வேன், சிறைத்துறை பேருந்து மோதல்: 16 பேர் பலி

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      உலகம்
America-Police-2024-04-26

Source: provided

விண்ட்ஹொக் : தெற்கு ஆப்பிரிக்காவில் போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் ஹர்டெப் மாகாணம் மெரிண்டெல் நகரில் நேற்று முன் தினம் மாலை சிறைத்துறை பஸ்சில் போலீசார், கைதிகள் உள்பட 13 பேர் பயணித்தனர். அந்த பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, போலீசார் 6 பேருடன் வந்தகொண்டிருந்த போலீஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறைத்துறை பஸ் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 14 போலீசார் உள்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து