Idhayam Matrimony

சென்னையில் டீ, காபி விலை உயர்வு அமல்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      தமிழகம்
Tea 2025-09-01

Source: provided

சென்னை : சென்னை மாநகரில் டீ கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வந்தது.

சென்னையில், 1,000க்கும் அதிகமான டீ கடைகள் இயங்கி வருகின்றன. பால் விலை மற்றும் காஸ் விலை உயர்வு உட்பட பல காரணங்களால், 2022ம் ஆண்டு, சென்னையில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீயின் விலை, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி விலை, 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, 15 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு பின், நேற்று முதல் டீ, காபி விலையை உயர்த்த, டீ கடை உரிமையாளர்கள் திட்டமிட்டனர். நேற்று முன்தினம் வரை 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ, நேற்று முதல் 3 ரூபாய் அதிகரித்து, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. காபி விலையும் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 20 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. அதேபோல, ராகி மால்ட், பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கிறது. பால், லெமன் டீ விலையில் மாற்றம் இல்லை. 

போண்டா, பஜ்ஜி, சமோசா விலையும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன. பார்சல் டீ, காபி விலையும், 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வு குறித்து டீ கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'அதிகரித்து வரும் மின் கட்டணம், காஸ் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக, டீ, காபி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் சுந்தர் கூறியதாவது: டீ, காபி விற்பனை விலையை எங்கள் சங்கம் முடிவு செய்வது கிடையாது. அந்தந்த கடை உரிமையாளர்கள், தங்கள் பகுதி சூழலுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்து, வியாபாரம் செய்கின்றனர். நேற்றும், சென்னையின் பல பகுதிகளில் 10 ரூபாய்க்கு டீ, காபி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இடத்திற்கேற்ப 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தற்போது, பல்வேறு பொருட்களின் விலை மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக, பல டீ கடைகளில் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலை உயர்வு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து