முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெறும் விழாவில் 45 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு நல்லாசிரியர் விருதினை வழங்கினார்.

இந்த சூழலில் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் நல்லாசிரியர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம், இரட்டை கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி மேலும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி அமல் செய்யப்பட்டது இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய சீர்திருத்தம் ஆகும். தற்போது ஜி.எஸ்.டி. 2.0 வரி விகிதம் நவராத்திரியின் முதல் நாளில் அமல் செய்யப்பட உள்ளது. இதன்படி இனிமேல் 5 சதவீதம், 18 சதவீதம் என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். புதிய வரி விகிதத்தால் சாமானிய மக்களின் வீட்டுச் செலவு கணிசமாக குறையும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அதேநேரம் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும்.

21-ம் நூற்றாண்டில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிபோது சுயசார்பு இந்தியா குறித்த கருத்துகளை எடுத்துரைத்தேன். இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒரு தாய், குழந்தையை பெற்றெடுக்கிறார்.

அந்த குழந்தைக்கு கல்வி போதித்து ஒளிமயமான எதிர்காலத்தை ஆசிரியரே உருவாக்கி கொடுக்கிறார். அந்த வகையில் எதிர்கால இந்தியாவை, ஆசிரியர்களே வடிவமைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பணியாற்றும் கோடிக்கணக்கான ஆசிரியர்கள், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து