முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      தமிழகம்
Vijay 2024-11-02

Source: provided

சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சியில் விஜய்யை வரவேற்க த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து பிரசாரம் செய்வதற்கான இடத்திற்கு வர சுமார் 5 மணி நேரம் ஆனது. 

தொடர்ந்து அரியலூரில் பேசிவிட்டு, குன்னம் பகுதியில் வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் சென்றார்.ஆனால் பெரம்பலூர் சென்றபோது நள்ளிரவு நேரமானதால் விஜய் அங்கு பேசாமல் சென்றுவிட்டார். இதனால் அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒரு நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த விஜய் , 2 இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்ய செய்தார். இந்த நிலையில் ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் முடிவு செய்துள்ளார். விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி த.வெ.க.வினர் மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலக்தில் மனு அளித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும் எனவும் ஐகோர்ட் நிர்ணயித்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்காக நேற்று பிற்பகல் விசாரிக்கக்கோரி முறையிட்ட நிலையில், இன்று விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து