முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற இன்று இலங்கை அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆப்கான்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      விளையாட்டு
17-Ram-82

Source: provided

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் ஆப்கான் அணி இன்று 

இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் தோல்வி அடைந்தால் ஆப்கான் அணி வெளியேற வேண்டியதிருக்கும்.

ஆப்கானுக்கு நெருக்கடி... 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேச அணி தோல்வியடைந்தால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை முதலிடம்...

தற்போது இலங்கை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (1.546 ரன்ரேட்) முதல் இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் விளையாடி விட்டது. இதில் 2-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று (-0.270) 2ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று (2.150) 3ஆவது இடத்தில் உள்ளது.

அடுத்த சுற்றுக்கு... 

இன்று இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறிவிடும். இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு இன்றைய போட்டி வாழ்வா? சாவா? போட்டியாகும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் ரன்ரேட் பார்க்கப்படும். அதனடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் இன்றைய போட்டி பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து