முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஆக அப்போலோ டயர்ஸ் தேர்வு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      விளையாட்டு
17-Ram-84

Source: provided

புதுடெல்லி: அப்போலோ டயர்ஸ் 579 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய மசோதா...

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

ட்ரீம் 11 உறவு...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்ததால்  ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் பி.சி.சி.ஐ. உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.

ஸ்பான்சர் இல்லாத...

இதனால் ஆசிய கோப்பை தொடல் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

579 கோடி ரூபாய்க்கு....

அப்போலோ டயர்ஸ் 579 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் 121 இருதரப்பு விளையாட்டுகளையும் 21 ஐசிசி போட்டிகளையும் உள்ளடக்கியது எனவும் தக்வல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து