முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீராங்கனை விலகல்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      விளையாட்டு
17-Ram-85-1

Source: provided

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நடந்து வருகிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் இருந்து இந்திய முன்னணி வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தேஜல் ஹசாப்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா

இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2ஆவது போட்டி நேற்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால் ஸ்மிரி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வயிடைந்தது. 3ஆவது மற்றும் கடைசி போட்டி 20-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.

மனம் திறந்த உசைன் போல்ட்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார். உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (9.58 வினாடிகளில்) மட்டுமில்லாமல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் (19.19 வினாடிகள்) மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் (36.84) உலக சாதனைகளைப் படைத்துள்ளார். உலகின் மிக வேகமாக ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்ற உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று அழைக்கப்பட்டார்.

ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசைன் போல்டிற்கு தற்போது படிக்கட்டுகளில் ஏறுவதற்கு கூட மூச்சு வாங்குகிறது என்று வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 39 வயதான உசைன் போல்ட்செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், "நான் ஒரு காலத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடினேன். ஆனால் இப்போது படிக்கட்டில் ஏறினால் கூட எனக்கு மூச்சு வாங்குகிறது. நான் உண்மையில் மீண்டும் ஓடத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் மீண்டும் முழுமையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது, மூச்சு வாங்கும் பிரச்சனை சரி ஆகும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

சாதனையை முறியடித்த அர்மாண்ட்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தடியூன்றித் தாண்டுதல் இறுதிச் சுற்றில் ஸ்வீடன் நாட்டு வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனையை படைத்தார் . இதன்மூலம் தனது உலக சாதனையை 14வது முறையாக அர்மாண்ட் டுப்லாண்டிஸ் முறியடித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு 6.17 மீட்டர் உயரம் தாண்டி அர்மாண்ட் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்தார். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து அவரது சாதனையை 14 ஆவது முறையாக அவரே முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தடியூன்றித் தாண்டுதல் போட்டியின் முடிசூடா மன்னனாக அவர் திகழ்ந்து வருகிறார். 

கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மற்றும் தில்லியில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கார்லஸ் பிராத்வெயிட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் ஜாம்பவான் வீரர் சிவநரைன் சந்தர்பாலின் மகன் டேகனரைன் சந்தர்பால் மற்றும் அலிக் அதனேஸ் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் கேப்டனான கார்லஸ் பிராத்வெயிட் 4 இன்னிங்ஸ்கள் முறையே 4, 4, 0 மற்றும் 7 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், அவர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணி விவரம்: ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிகன் (துணை கேப்டன்), கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாக், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியர், ஜேடன் சீல்ஸ்.

தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி லாகூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 121 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அயபோங்கா காக்கா 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த தென் ஆப்பிரிக்க அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 259 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மாரிசேன் காப் 120 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து