முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

Source: provided

ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார். வட ஆப்பிரிக்க நாட்டுக்கு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். நிகழ்வில் அவர் பேசியதாவது;-

சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து கொண்டு வருவதை நீங்கள் உணர முடிகிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்னர், சர்வதேச சமூகத்தில் இந்தியா பேசும் போது, அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.ஆனால் இன்றோ இந்தியா சர்வதேச மன்றத்தில் பேசும் போது, முழு உலகமும் அதை கவனித்துக் கேட்கிறது.

போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் வலியுறுத்தியதால் நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம். பிரதமரும் ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு இடைநிறுத்தம் என்று தான் கூறி உள்ளார். அது மீண்டும் தொடங்கலாம். ஆப்பரேஷன் சிந்தூர் 2, ஆபரேஷன் சிந்தூர் 3 என்று எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை நாங்கள் சொல்லமுடியாது, அவர்களின் நடவடிக்கையை பொறுத்தது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு பதில் கிடைக்கும்” இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து