முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      தமிழகம்
DCM 2025-09-23

Source: provided

விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

துணை முதல்வர் .உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை முதல்வர், முதல்வர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 97,741 நபர்களுக்கு 153.43 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,193 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணியாணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 996 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:-

நம்முடைய முதல்வர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களையும் மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த திட்டங்களுடைய பயன் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று சேர்ந்து மக்கள் பொருளாதார சமூக முன்னேற்றங்களை தொடர்ந்து அடைந்து வருகின்றார்கள்.

இந்த திட்டங்களில் விடுபட்டவர்களை கண்டறிந்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உங்களுடன் ஸ்டாலின் என்ற மக்களைத் தேடி மனுக்களைப் பெற்று, அதற்கான தீர்வு காணுகின்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முகாம்களில் மனுக்களை அளித்த மக்களுக்கு விரைந்து தீர்வுகளை வழங்க வேண்டும். இந்த முகாம் குறித்த விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்தி, மக்களை இந்த முகாம்களுக்கு வரவழைக்க வேண்டியது நம்முடைய கடமை. அதேபோல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் குறித்த காலத்திற்குள் நடத்த அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

முதல்வர் எத்தனையோ திட்டங்களை தீட்டினாலும், நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் தான், அந்த திட்டங்கள் மக்களை சென்றடையும். அரசு அலுவலர்களாகிய நீங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு, அரசுக்கும், முதல்வர் அவர்களுக்கும் நல்ல பெயரை மக்களிடத்திலே பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு, அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, விடைபெறுகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து