முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை யாரும் அடிமையாக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      தமிழகம்
Eps 2024-12-13

Source: provided

ஊட்டி : அ.தி.மு.க.வை யாராலும் அடிமையாக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் என்று பெயரை பெற்றுத் தந்தது அ.தி.மு.க.தான். ஒரு நபருக்குப் பணம் சொத்து அனைத்தும் இருந்தாலும் கல்வி ஒன்று தான் நிலையானது அதை யாராலும் அபகரிக்க முடியாது. மனிதனின் இறுதிக் காலம் வரை இருக்கக்கூடியது கல்விச் செல்வம் என்பதால் அந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது அ.தி.மு.க. தான்.

மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசுதான். முழுக்க முழுக்க மாநிலங்களின் நிதியைக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். ஆனால் திமுக ஆட்சியில் திறமை இல்லாத முதல்-அமைச்சர் பொம்மை முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினால் இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை.  அதிகக் கடன் வாங்குவதில் முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழல், கமிஷன் கரப்ஷன் உள்ளிட்டவற்றின் முன்மாதிரியாக திமுகதான் அதேபோல் டாஸ்மாக் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது முன்மாதிரியாக திமுக தான் குடும்ப ஆட்சி. திமுக அரசு குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நீங்கள் கூட்டணி வைத்தால் நல்லது. அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?. அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை; அ.தி.மு.க.வை யாராலும் அடிமையாக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளை சுயமரியாதையோடு நடத்திவரும் கட்சி அ.தி.மு.க.; கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்தி வருகிறது திமுக; சாறை உறிஞ்சிவிட்டு சக்கையை கூட்டணிக்கு தருகிறது திமுக. 

காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கூட்டணி ஆட்சி கேட்கிறார்கள்; செல்வப்பெருந்தகை மறுக்கிறார்; திமுக கூட்டணிக்கு உள்ளேயே பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டி, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைத்திட தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து