முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.வி.தினகரனுடன் திடீர் சந்திப்பு என்ன? அண்ணாமலை விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      அரசியல்
Annamalai 2024 11 20

சென்னை, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்தார். இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரனின் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை நேரில் சென்ற அண்ணாமலை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டி.டி.வி.தினகரனுடனான சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது: ”டி.டி.வி. தினகரன் 2024 முதல் எங்களுடன் பயணம் செய்கிறார். கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணத்தில் இருந்ததால், சென்னை வந்தவுடன் அவரை சந்தித்துப் பேசினேன். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தோம்.

டி.டி.வி. தினகரனுடன் எனக்கும் பா.ஜ.க.வுக்கும் நட்புறவு தொடர்கிறது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரது முடிவுக்கு காத்திருக்கிறோம். தேர்தல் களத்தின் சூடு வரும்போது, முடிவுகள் மாறும் என நம்புகிறேன். 2024 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எங்களை நம்பி வந்தவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன். அரசியல் நிரந்தர எதிரிகள், நண்பர்கள் கிடையாது, கூட்டணிகள் மாறும்.” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து