முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம்-வன்முறை : இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      இந்தியா
Ladak 2025-09-24

Source: provided

லே : லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தலைநகர் லே-யில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு தொடர்ந்து முன்வைத்து வருகிறது. மேலும், தங்கள் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் எல்ஏபி வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே, கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட இருவர், கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் இருவரும் (செப். 23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த எல்ஏபி ஆதாரவாளர்கள், லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதனால், பா.ஜ.க. ஆதரவாளர்களுக்கும் எல்ஏபி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனிடையே, இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு கார்கிலின் சமூக - அரசியல் - மத குழுக்களின் கூட்டமைப்பான கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) அழைப்பு விடுத்துள்ளது.

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, கோரிக்கைகள் தொடர்பாக எல்ஏபி மற்றும் கேடிஏ உடன் லடாக் தொடர்பான உயர் அதிகாரக் குழு அக்டோபர் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இந்த போராட்டம் லடாக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ல் நடந்த லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் இருந்து 2019-ல் பிரிக்கப்பட்ட லடாக் அதுமுதல் யூனியன் பிரதேசமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து