முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 பேட்டிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து அபிஷேக் சர்மா சாதனை

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      விளையாட்டு
Abhishek-Sharma 2025-07-30

Source: provided

துபாய், : டி-20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

துவக்க ஆட்டக்காரர்... 

சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்காக டி20 தரவரிசைப் பட்டியல் நேற்று (செப்.24) வெளியிடப்பட்டது. ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, முதல் முறையாக ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

முதலிடத்தில் உள்ளார்...

உலகளவில் 6-வது வீரராகவும், இந்தியளவில் 3-வது வீரராகவும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி(909), சூர்யகுமார் யாதவ் (912) ஆகியோருக்கு அடுத்தபடியாக அபிஷேக் சர்மா(907) புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் அபிஷேக் சர்மா, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 174 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 900 புள்ளிகளைக் கடந்த வீரர்கள் விவரம் வருமாறு., 919 - டேவிட் மலான்,  912 - சூர்யகுமார் யாதவ், 909 - விராட் கோலி,  907 - அபிஷேக் சர்மா*, 904 - ஆரோன் பின்ச், 900 - பாபர் அசாம், 894 - டேவிட் வார்னர், 886 - கெவின் பீட்டர்சன், 885 - டிராவிஸ் ஹெட்.

டி-20 தரவரிசைப் பட்டியல்:

1) அபிஷேக் சர்மா - 907 புள்ளிகள்.

2) பில் சால்ட் - 844 புள்ளிகள்.

3) திலக் வர்மா - 791 புள்ளிகள்.

4) ஜோஸ் பட்லர் - 785 புள்ளிகள்.

5) டிராவிஸ் ஹெட் - 771 புள்ளிகள்.

6) சூர்யகுமார் யாதவ் - 729 புள்ளிகள்.

7) பதும் நிஷங்கா - 728 புள்ளிகள்.

8) டிம் செய்ஃபெட் - 725 புள்ளிகள்.

9) டிம் டேவிட் - 676 புள்ளிகள்.

10) டெவால்டு பிரேவிஸ் - 674 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து