முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் 11 குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் அதிரடியாக கைது

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      இந்தியா
Medisan-2 2025-10-04

Source: provided

மத்தியப்பிரதேசம் : ம.பி.யில் குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கம்மும் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்ததன் காரணமாக 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல மருத்துவரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எனவே குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம்மும் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளை பலி கொண்ட 'கோல்ட்ரிஃப்' என்ற அந்த இருமல் மருந்தில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. பிரவீன் சோனி மற்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ்  நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து