முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட்லி கடை திரைப்படம் வெற்றி: கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      சினிமா
Dtanus 2025-10-04

Source: provided

தேனி : நடிகர் தனுஷ் இட்லி கடை வெற்றிக்காக கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை அக்.1 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருந்தனர். வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதையில் சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருந்ததால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முக்கியமாக, பலரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ராயனைத் தொடர்ந்து இயக்குநராக தனுஷ் இப்படத்திலும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவார் என்றே தெரிகிறது. மேலும், இதுவரை இப்படம் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.

இந்த நிலையில், இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் தன் குலதெய்வ அமைந்துள்ள தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் தனுஷ் கிடா வெட்டி ஊர்க்காரர்களுக்கு விருந்தளித்துள்ளார். தன் குடும்பத்தினருடன் தேனி சென்ற தனுஷ், குலதெய்வ வழிபாட்டை முடித்ததும் நேற்று விருந்தளித்துள்ளார். விருந்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து