முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
Udhayanidhi 2024-11-25

Source: provided

திருச்சி : திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 10,000 முகாம்கள் என்ற இலக்கில், 8,000 முகாம்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இதுவரை 18 லட்சம் மனுக்களில் 12 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் வழியில் தனது 2026 தேர்தல் பயணத்தை 09.09.2025 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் இல்லத்தில் வணங்கி தொடங்கினார். இந்த பயணம், கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கும், அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒரு முக்கிய முயற்சியாகும். இதன் ஒரு பகுதியாக, அவர் மாவட்டம்தோறும் பயணம் மேற்கொண்டு, அனைத்து நிலைகளிலும் உள்ள கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகளை சந்தித்தார். கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டின் வளர்ச்சியும் சாதனைகளும் தமிழ்நாட்டின் முதல்வர் ஒவ்வொரு தொகுதியையும் பார்த்துப் பார்த்து செயல்படுவதால், இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் டபுள் டிஜிட் அடைந்து, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

பெரியப்பட்டி பகுதியில் அடியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், தொகுதி முழுவதும் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள், அரசு கலைக்கல்லூரிக்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள், திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டிடங்கள் கட்டபட்டுள்ளன.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பிடிக்காத மத்திய பாஜக அரசு, இங்குள்ள "அடிமைகளுடன்" சேர்ந்து பல சதிகளில் ஈடுபடுகிறது. நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என மாநிலங்களின் உரிமைகள் அத்தனையும் பறிக்கின்ற வேலையை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மிக முக்கியமாக, மக்களவைத் தொகுதிகளைக் குறைத்து மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளை 32 தொகுதிகளாகக் குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவராக இந்தியாவிலேயே நம்முடைய முதல்வர் திகழ்கிறார்.

அதி.மு.க.வில் இன்று இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி அணி, செங்கோட்டையன் அணி என 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன. திருச்சியில் மட்டும் மூன்று அணிகள் தனியாக இயங்குகின்றன. நான்கு மாதங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, இன்று அதே வாயால், "எப்பவுமே பா.ஜ.க.வுக்கு நன்றிக்கடனுடன் இருப்பேன்" என்று சொல்கிறார்.

திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 10,000 முகாம்கள் என்ற இலக்கில், 8,000 முகாம்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இதுவரை 18 லட்சம் மனுக்களில் 12 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு மாநில அரசும் செய்யாத சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து