முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்: பெங்கால் அணியில் ஷமி, ஆகாஷ் தீப்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      விளையாட்டு
Mohammed Shami-2023-12-07

Source: provided

மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

அபிமன்யு ஈஸ்வரன்...

2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரக்கெட் சங்கம் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியை அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர் அபிஷேக் பொரேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குரூப் சி-யில்... 

அனுஸ்டப் மஜும்தார், சுதீப் சட்டர்ஜி போன்ற மூத்த வீரர்களும், சுதீப் குமார் கராமி, ராகுல் பிரசாத், சவுரப் குமார் சிங், விஷால் பாட்டி போன்ற இளைஞர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். பெங்கால் அணி எலைட் குரூப் சி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் குஜராத், அரியானா, சர்வீசஸ், ரெயில்வேஸ், திரிபுரா, உத்தரகாண்ட், அசாம் அணிகள் இடம் பிடித்துள்ளன. ஈடன் கார்டனில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை பெங்கால் எதிர்கொள்கிறது.

38 அணிகள்...

ரஞ்சி டிராபில் 38 அணிகள் விளையாடுகின்றன. 32 அணிகள் எலைட் டிவிசனில் நான்கு குரூப்புகளாக பிரிக்கப்படும். 8 அணிகள் பிளேட் டிவிசனில் இடம் பெறும். எலைட் குரூப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் டிவிசனில் இருந்து நான்கு அணிகள் நாக்அவுட் போட்டிக்கு முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து