முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசத்திற்காக விளையாடுவதில் பெருமை: சாம்சன்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

மும்பை : இந்திய அணிக்காக நான் எதுவென்றாலும் செய்ய தயார். இந்திய ஜெர்சியை அணிந்து அந்த டிரஸ்ஸிங் அறையில் தங்க நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விருதுகள்... 

இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 சிஏட் கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சஞ்சு சாம்சனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது. அப்போது அவரிடம் ஆசிய கோப்பை தொடரில் அவரது பேட்டிங் ஆர்டர் குறித்து கேள்வி எழுப்பபட்டது. 

9-வது இடத்தில்... 

அதற்கு சாம்சன் கூறியதாவது:-இந்திய அணிக்காக நான் எதுவென்றாலும் செய்ய தயார். இந்திய ஜெர்சியை அணிந்து அந்த டிரஸ்ஸிங் அறையில் தங்க நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். என் நாட்டிற்காக என் வேலையைச் செய்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அணிக்கு தேவை என்றால் 9-வது இடத்தில் பேட்டிங் செய்யவும், இடது கை சுழற்பந்து வீச்சாளரை போல் பவுலிங் செய்யவும் கூட செய்வேன். நாட்டுக்காக எந்த வேலையாக இருந்தாலும், எனக்கு அது கவலையில்லை.

பெருமைப்படுகிறேன்... 

சமீபத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தேன். ஆனால் அதில் மொத்தமாக 40 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. எண்கள் என்ன கூறுகிறது என்பதை விட நான் தற்போது இருக்கும் நிலையை எண்ணி பெருமைப்படுகிறேன். மேலும் நான் கடந்து வந்த சவால்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு சாம்சன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து