முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது: தி.மு.க. மீது தமிழிசை குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Tamilsai 2023 04 11

Source: provided

சென்னை : தி.மு.க., மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்தில் உள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;-

பீகார் மக்களை கீழ்த்தரமாக பேசுவது தி.மு.க.வினர் என்றுதான் பிரதமர் சொன்னார். தமிழர்களை அல்ல. தி.மு.க.வில் எம்பிக்களாக இருக்கும் பாதி பேர் பச்சை தமிழர்களே கிடையாது. கணக்கெடுத்து பாருங்கள். நாங்கள் உங்களை வேறுப்படுத்தி பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் அமைச்சர்களும் எம்.பி.க்களும் பீகாரிகளை தரம் தாழ்த்தி பேசினார்களா இல்லையா? திரித்து பேசாதீர்கள். பீகாரி, வடக்கன் என பிரித்து பிரித்து மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருப்பது தி.மு.க. 

பீகாரிகள் அறிவில்லாதவர்கள்.. அவர்கள் தமிழகத்தில் உள்ள வேலையை பறித்துக்கொள்கின்றனர்’ என்று தி.மு.க. அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். தயாநிதி மாறனும் பீகாரிகளை குறித்து தரக்குறைவாக பேசியுள்ளனர். பீகாரி உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வேறுபாட்டுடன் பிரித்து பேசும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். தி.மு.க. மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தி.மு.க. மீதுதான் வைக்கப்படுகிறது. தமிழர்கள் மீது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து