முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Delhi 2024-10-19

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பனிப்பொழிவு சற்று கூடுதலாகவே, அதோடு காற்று மாசு கலந்து கடும் புகைமூட்டமாக தென்பட்டது. இதனால் பார்வைத்திறனின் தூரம் குறைவு மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். காற்றுத்தர அளவுக் குறியீட்டில் டெல்லியின் பல இடங்கள் மோசமான நிலையை காட்டின. பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். ஆனால் நேற்று முன்தினம் டெல்லியில் அதிகபட்சமாக ஆனந்த் விகார் பகுதியில் காற்றின் தர குறியீடு 408 ஆக இருந்தது. பிற இடங்களில் 350-க்கு கீழே குறையவில்லை.

இந்த அதிக அளவிலான காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களும், நீரிழிவு மற்றும் இருதய பிரச்சினை உள்ளவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு காற்று மாசு அதிகமானால் பக்கவாத பாதிப்புகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து