முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: திண்டுக்கல் சீனிவாசன்

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      தமிழகம்
DGL-Srinivasan 2023 08

Source: provided

மதுரை : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார். அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியும் நேற்று விளக்கம் அளித்து உள்ளார்.

இந்நிலையில், மதுரையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடையே பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை விட முன்னால் பிறந்ததால் செங்கோட்டையன் மூத்த நிர்வாகியாகி விடுவாரா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர், செங்கோட்டையன் முன்னால் பிறந்தார். இதனை தவிர எல்லா தகுதிகளும் பழனிசாமிக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என கூறினார்.

நானும், ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான் என்று கூறிய அவர், ஜெயலலிதா இருக்கும்போதே செங்கோட்டையன் முதல்-அமைச்சராக விரும்பியவர். அதனால், செங்கோட்டையன் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து