முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
election 2025-01-06

Source: provided

சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நேற்று (செவ்வாய்கிழமை) தொடங்கி உள்ளது. ஆளுங்கட்சி உள்பட பெரும்பாலான கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், எந்தவித தவறும் நடக்காது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியின்போது பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் வருமாறு:-

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேற்று முதல் (4-ந் தேதி) முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தற்போதுள்ள வாக்காளர்களின் முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள். அப்போது, அவர்களே வாக்காளர்கள் படிவத்தை நிரப்புவதற்கும் வழிகாட்டுவர்.

கணக்கீட்டு நேரத்தில் எந்தவொரு வீடும் பூட்டப்பட்டிருப்பதை அல்லது மூடப்பட்டிருப்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர் கண்டறிந்தால், அவர் கணக்கீட்டு படிவங்களை அந்த வீட்டிலேயே வைத்துவிட்டு வருவார். அந்த படிவங்களை பொதுமக்கள் நிரப்பி வைத்தால் போதுமானது. நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க குறைந்தது 3 முறை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகை தருவார்கள்.

தற்போதுள்ள வாக்காளர்களுக்கு முன்கூட்டியே நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கும், நிரப்பப்பட்ட படிவங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றுவதற்கும் https: Voters.eci.gov.in, மற்றும் https:electors.eci.gov.in அல்லது ECINet mobie App மூலம் வசதி செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு வாக்காளரும் இந்த படிவத்தை கணக்கெடுப்பு காலத்தில் வாக்காளர்கள் எந்தவொரு ஆவணத்தையும் தரவேண்டிய அவசியமில்லை. வாக்காளர் பதிவு அலுவலர்களால் தங்களது பெயர் முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலுடன் இணைக்கப்படாத காரணத்தினால் அறிவிப்பு வழங்கும் பட்சத்தில் மட்டுமே சுய சான்றளிக்கப்பட்ட கீழ்கண்ட ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.வாக்காளர்களால், சுயச்சான்று அளித்து சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள்:

மத்திய அரசுமாநில அரசுபொதுத்துறை நிறுவனங்களின் வழக்கமான அடையாள அட்டை, ஊழியர் ஓய்வூதியம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டைஓய்வூதிய ஆணை 01.07.1987-க்கு முன்னர் இந்தியாவில் அரசுஉள்ளூர் அதிகாரிகள்வங்கிகள்அஞ்சல் அலுவலகம் எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டைசான்றிதழ்ஆவணம், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட்,  அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன்கல்விச் சான்றிதழ்.

தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், ஓ.பி.சிஎஸ்.சிஎஸ்.டி அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட எந்தவொரு சாதிச் சான்றிதழ், தேசிய குடிமக்கள் பதிவேடு, மாநிலஉள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு, அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு நிலம்வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்,  ஆதார், வாக்குச்சாவடி நிலை அலுவலர் கணக்கெடுப்பு படிவங்களை வீடுதோறும் சென்று விநியோகம் செய்து முடித்த நிலையில், மீண்டும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தின் நகலை சேகரிப்பர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் கணக்கீட்டு படிவத்தின் ஒரு நகலை அவருடன்அவளுடன் தேவையான ஆவணங்களுடன் வைத்திருப்பர். மேலும் விண்ணப்பதாரரால் தக்கவைக்கப்பட வேண்டிய கணக்கீட்டு படிவத்தின் மற்ற நகலில் படிவம் மற்றும் வண்ண புகைப்படம் கிடைத்ததற்கான ஒப்புதலை வழங்குவார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து