முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்: ராஜ்நாத் பேச்சு

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      இந்தியா
Rajnath-Singh 2024-12-07

Source: provided

பாட்னா : வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்குமுன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அரியானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வெற்றிபெற்றதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு தேர்தல் ஆணையமும் உதவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரியானாவில் மட்டும் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், பீகாரிலும் வாக்கு திருட்டு முயற்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார். அதேவேளை, இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில், பீகாரில் 2ம் கட்ட தேர்தல் 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் பீகாரின் சசராமில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பீகார் வாக்குத்திருட்டு நடைபெறுவதாக ராகுல் காந்தி நினைத்தால் இதுகுறித்து ஆதாரங்களுடன் அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். ஆனால் ராகுல் காந்தி அதை செய்யவில்லை. அதற்குமாறாக தேர்தல் ஆணையத்தின் மீது அவர் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைக்கிறார். அவர் உண்மையில் பொய் சொல்கிறார். பாதுகாப்புப்படையில் இடஒதுக்கீடு குறித்த விவகாரங்களை ராகுல் காந்தி எழுப்பினார். நமது பாதுகாப்புப்படை அனைத்திற்கும் மேல் உள்ளது. பாதுகாப்புப்படையை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து