முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானிக் சின்னர் சாம்பியன்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      விளையாட்டு
17-Ram-98-1

Source: provided

ஏடிபி இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். யுஎஸ் ஓபனில் தோல்வியுற்றதுக்கு யானிக் சின்னர் அல்கராஸை பழிதீர்த்துள்ளார்.  இத்தாலியில் இனால்பி அரினா  திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் நம்.2 வீரர் யானிக் சின்னர் 7-6 (4), 7-5 என்ற செட்களில் உலகின் நம்.1 வீரர் அல்கராஸை வீழ்த்தினார். இந்தாண்டின் சின்கராஸின் கடைசி பட்டம் யானிக் சின்னரின் பக்கம் திரும்பியுள்ளது.இந்தாண்டின் ஆஸி. ஓபன், விம்பிள்டன் கோப்பையை சின்னரும் யு.எஸ். ஓபன், பிரெஞ்சு ஓபனை அல்கராஸும் வென்றனர். 

இந்நிலையில், இந்தாண்டில் ஆறாவது முறையாக இருவரும் சந்திக்க, சின்னர் வெற்றி பெற்றார். தனது சொந்த மண்ணில் சின்னர் வெற்றி பெற்றது அதன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இருவரும் 16 முறை மோதியிருக்க 10 முறை அல்கராஸும் 6 முறை சின்னரும் வென்றுள்ளார்கள். இறுதிப் போட்டியில் சின்னர் தொடர்ச்சியாக 10ஆவது முறையாக வென்றுள்ளார். கடைசியாக ஜோகோவிச் உடன் 2023 இறுதிப் போட்டியில் தோற்றார். உள்ளரங்கு கடின தரைப் போட்டிகளில் சின்னர் தனது 31-ஆவது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளார்.

புதிய சாதனை படைத்த பவுமா

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது. அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

ஹர்பஜன்சிங் கடும் குற்றச்சாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது. இந்தநிலையில் ஆடுகளம் தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபோன்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:- டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்டுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள். அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இது போன்ற ஆடுகளங்கள் வீரர்களை முன்னேற அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்.சி.பி. அணியை வாங்க ஆர்வம்

நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது. அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தொடரை வென்றது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக வென்ற அசத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள், முத்தரப்பு டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதன்படி நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றிருக்க, நேற்று கடைசி போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச, இலங்கை அணி 45.2 ஓவர்களில் 211 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக இலங்கை வீரர் சமரவிக்ரமாக 48 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 3, பைசல் அக்ரம், ஹாரிஸ் ரௌஃப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 214/5 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 61, ஃபகர் ஸமான் 55 ரன்களும் எடுத்தார்கள். இலங்கை சார்பில் ஜெஃப்ரி வண்டெர்ஸி 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் தொடரினை பாகிஸ்தான் அணி 3-0 என வென்று அசத்தியுள்ளது. கடைசி போட்டியின் ஆட்ட நாயகனாக முகமது வாசிம் ஜூனியரும் தொடர் நாயகனாக ஹாரிஸ் ரௌஃபும் தேர்வானார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து