முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      இந்தியா
Militry 2025-11-18

Source: provided

ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் மரேதுமிலி வனப்பகுதியில் நேற்று நடந்த என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியும் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம் பூவர்தி கிராமத்தை சேர்ந்த நக்சலைட்டு முக்கிய தளபதி மத்வி ஹிட்பா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் சத்தீஷ்காரில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. என்கவுன்டரில் மத்வி ஹிட்பாவின் மனைவி ராஜுயும் கொல்லப்பட்டுள்ளார் என்று பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து