முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வாய்ப்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ரிஷப் பண்ட் கேப்டன்...

தென் ஆப்பிரிக்கா அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து கில் விலகி உள்ளார். இதனால் ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல மாற்றங்கள்... 

இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் அதன்படி முதல் போட்டி 30-ம் தேதியும், 2-வது போட்டி டிசம்பர் 3-ம் தேதியும் , 3-வது மற்றும் கடைசி போட்டி 6-ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி இடம் பெற மாட்டார்கள் என கூறி வந்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கழுத்தில் காயம்...

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பங்கேற்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுப்மன் கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது கழுத்து வலியால் வெளியேறினார். அதன் பிறகு களம் இறங்கவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 2-வது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் அவர் ஒருநாள் தொடரிலும் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர்.. 

மறுபுறம் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஐ.சி.யூ.-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது வேகமாக குணமடைந்து வருகிறார். இருப்பினும் அவர் முழுமையாக உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவற விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்ட்யா...

முன்னணி வீரரான ஹர்திக் பாண்ட்யா, ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட தசை பிடிப்பிலிருந்து குணமடைந்து வருவதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவு பணிச்சுமை காரணமாக இந்த ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் ஹர்திக் மற்றும் பும்ரா இருவரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து