முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தேர்தல் வெற்றியை அடுத்து தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றிப்பெற அமித்ஷா முயற்சி

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      அரசியல்
amit-shah 1

சென்னை, பீகார் தேர்தல் வெற்றியை அடுத்து தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றிப்பெற அமித்ஷா முயற்சி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இந்தியா கூட்டணியால் வெறும் 35 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 101 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் களம் கண்டு 85 இடங்களில் வெற்றிக்கனியை பறித்துள்ளது. கடந்த முறை (2020) போலவே இந்த முறையும் நிதிஷ்குமாரே முதல்வராக யாக பதவியேற்க இருக்கிறார். அதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், மீண்டும் வரும் 20-ந்தேதி முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தியது மத்திய அமைச்சர் அமித்ஷா என்றே சொல்லவேண்டும். அந்தக் கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகளாக இருந்தாலும், லோக் ஜனசக்தி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இதில், ஒரு சில கட்சிகளுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாருக்கு இணக்கமான சூழல் இல்லாதபோதும், அவர்களுடன் பா.ஜ.க. பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணிக்கு கொண்டுவந்தது. அதனால்தான் தேர்தலில் இமாலய வெற்றியும் கிடைத்தது என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் மாஸ்டர் பிளான் போட்டவர் மத்திய அமைச்சர் அமித்ஷாதான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பார்வை, அடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் நோக்கி திரும்பும் என்று கூறப்படுகிறது. இங்கு ஏற்கனவே ஒன்றிணைந்த அ.தி.மு.க.வை உருவாக்க அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், ஒருங்கிணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த முறை பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க.விலும் தந்தை-மகன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. எனவே, அ.தி.மு.க., பா.ம.க.வை மீண்டும் கட்டமைத்து கூட்டணியை வலுப்படுத்த பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்தப் பணிகள் விறுவிறுப்படையும் என்றும் கூறப்படுகிறது. தமிழக பாஜக நிர்வாகிகளும் பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து