முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாண்ட்யா, பும்ராவுக்கு இடமில்லை

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      விளையாட்டு
Bumra 2025-08-12

Source: provided

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாண்ட்யா, பும்ராவுக்கு இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ராஞ்சியில் முதல் போட்டி...

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரில் ஓய்வு... 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கு திரும்பவது கடினம் என தெரிய வந்துள்ளது. மேலும் சுப்மன் கில் ஒருநாள், மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து