எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தில்லி கிரிக்கெட் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
திடீர் ஓய்வு அறிவிப்பு...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், மூத்த வீரர்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்தாண்டு (2024) இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன்பின், இந்தாண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட்டில் இருந்து இருவரும் விடைபெற்றனர். டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டபோதிலும், இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
கட்டாய ஓய்வுபெற...
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை விளையாடுவது சாத்தியமில்லாதது. அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தாவிட்டால் இருவரையும் கட்டாய ஓய்வுபெற அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் பி.சி.சி.ஐ.யின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசினார். விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன நிலையில், 3-வது போட்டியில் 74 ரன்கள் குவித்தார்.
உள்ளூர் போட்டிகளில்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி, 135 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார். இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவுறுத்தி வருகிறது.
ரோகித் விருப்பம்....
அதன் ஒருபகுதியாக, உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தில்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தில்லி அணிக்காக விராட் கோலி விளையாடுவார் என்று தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜேட்லி உறுதிபடுத்திள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்த தகவல் வெளியீடு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று கார்த்திகை தீபத்திருவிழா: தி.மலை கிரிவலப்பாதையில் 1,060 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
-
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
02 Dec 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை நீடித்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு விருந்து அளிக்கப்பட்
-
செயல்பாட்டு திறனை மேம்படுத்த 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு
02 Dec 2025புதுடெல்லி : வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அர
-
போதைப்பொருள் கடத்தல்: நடப்பாண்டில் மட்டும் சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
02 Dec 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு 22 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 17 பேருக்கு மரண தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஆசிரியை கொலை வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி
02 Dec 2025தஞ்சை : ஆசிரியை கொலை வழக்கில் கைதான பெயிண்டர் சிறையில் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு
03 Dec 2025புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளார்: சகோதரி உஸ்மா தகவல்
03 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளதாக அவரது சகோதரி உஸ்மா தெரிவித்துள்ளார்.
-
சஞ்சார் சாதி செயலி: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
03 Dec 2025டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
வாழைப்பழம் சாப்பிட்டபோது விபரீதம்: மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
03 Dec 2025ஈரோடு : ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானில் எச்.ஐ.வி அதிகரிப்பு
03 Dec 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 80 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
வீட்டு வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்
03 Dec 2025சென்னை, வீட்டு வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்
03 Dec 2025கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
-
இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை
03 Dec 2025சென்னை : இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
ஹாங்காங் தீ விபத்து; பலி 156 ஆக உயர்வு
03 Dec 2025ஹாங்காங் : ஹாங்காங் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.
-
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு திருமணம்
03 Dec 2025காசா : போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
-
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் இன்று இந்தியா வருகிறார்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
03 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ரஷ்யா அதிபர் புதின், இன்று இந்தியா வருகிறார்.
-
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களை மீட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை
03 Dec 2025புதுடெல்லி, ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Dec 2025வாஷிங்டன் வெனிசுலாவுக்குள் புகுந்து விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.


