முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் விவகாரம்: பார்லி., இரு அவைகளிலும் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி - வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
Parliment--

Source: provided

புதுடில்லி : திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்தனர்.

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு தி.மு.க. அரசு அனுமதி மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., இந்து முன்னணி அமைப்பு உள்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம், மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. திருச்சி சிவா உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இடம் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த முடியாது எனக் கூறி, தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கையை சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். இதனால் தி.மு.க. எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து