முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது : உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
Modi 2024-08-24

Source: provided

புதுடெல்லி : உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்றும் வருடாந்திர உச்சிமாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார். சமீப காலமாக இந்தியா-அமெரிக்கா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், ரஷ்ய அதிபரின் இந்திய வருகை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் இந்தியா, ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல், இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தினர் ஒரு நெருங்கிய நண்பராக, அங்குள்ள நிலைமை குறித்து ரஷ்யா தொடர்ந்து எங்களுக்கு தெரிவித்து வருகிறது. நம்பிக்கை ஒரு பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும் அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். 

போர் நிறுத்தத்திற்கான சமீபத்திய முயற்சிகள் குறித்து நான் அறிவேன். உலகம் அமைதியை நோக்கித் திரும்பும் என்று நான் நம்புகிறேன். உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். இந்தியாவுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, அது அமைதியின் பக்கம். அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து