முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்: கல்வி அலுவலர்

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
10th-exam 2023 04 04

Source: provided

சென்னை : சென்னையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இன்று (டிசம்பர் 6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழை காரணமாக நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், டிச. 2ஆம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று மழை சற்று ஓய்ந்திருந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து