முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Pawan-Kalyan----

சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் முதல் வீடே திருப்பரங்குன்றம்தான். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது இந்துக்களின் பாரம்பரிய வழக்கமாகும். 

பாரதத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் இதனை புரிந்துகொள்ள வேண்டும் – கசப்பான உண்மை இதுதான் – தீபத்தூணில் தீபமேற்ற நமக்கு உரிமை உள்ளது என்பதை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது. முதலில் தனி நீதிபதி மூலமாகவும்: பின்னர் இரு நீதிபதிகள் அமர்வு மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டரீதியாக நாம் வெற்றி பெற்று விட்டோம். இருந்தும், நாம் விட்டுக்கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள் – எந்த சமய விழாக்களையேனும் ஒரு வாரம் தள்ளிப்போட முடியுமா? குறிப்பிட்ட ஒரு நாளில் நடக்க வேண்டிய புனித திருவிழாவை, மற்றொரு நாளுக்கு மாற்ற முடியுமா? முடியாது. காரணம், சமயம் சார்ந்த காலநேரமும் ஒவ்வொரு சமய நாள்காட்டிகளும் மாற்றப்பட முடியாதவை.

இந்திய அரசமைப்பு சாசனத்தின் 25வது சட்டப்பிரிவு வழங்கியுள்ள சமய சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமையாகும். அது, இந்துக்களுக்கு மட்டும் பெயரளவுக்கான உரிமையாகிவிடுமா? காவல்துறை ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் நீதிமன்ற தீர்ப்பையே இல்லையென்று ஆக்கிவிட முடியுமா? தீபமேற்றுவது பிரச்சினையை ஏற்படுத்தாத சமயக் கடமை என்று உயர் நீதிமன்றமே உறுதி செய்த நிலையில் – அதை சமூக நல்லிணக்கத்துக்கான அச்சுறுத்தல் என்று முடிவு செய்வது யார்? 

சமயப் பிரச்சினைகள் எழும்போது, எவ்வாறு ஒற்றுமையுடனும் கூட்டாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அபிரகாம் மதத்தவர்களைப் பார்த்து இந்துக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் சமய நம்பிக்கைக்காக இனம், மொழி அனைத்தையும் கடந்து அவர்கள் செயல்படுவார்கள்.

சாதி, மொழி சார்ந்து இந்துக்கள் பிரிந்துகிடக்கும் வரை – இந்து சமயத்தின் மீது நையாண்டி, அவமானம், பழிதூற்றுதல் - என எல்லாம் நடக்கும். இந்து தர்மம் - தமிழில் சொல்வதெனில் அறத்தின் அடிப்படையில், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கீழ் இந்துக்கள் ஒன்றுபடவில்லையெனில், இந்து என்கிற உணர்வுநிலையை இழந்துவிடுவோம். சொந்த மண்ணில் தங்களுக்கு நேரும் அவமானங்களுக்கு எதிராக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை – காமாக்யா முதல் துவாரகா வரை இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என நான் நம்புகிறேன். என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து