முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Thiruvannamalai

திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம்  மாலை ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளனர். 

அவர்கள் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வேகமாக செல்லும்படி சன்னதியில் இருந்து வெளியே இழுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், ஆந்திரா பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் போலீசாருக்கும், ஆந்திரா பக்தர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்பட ஓரிரு போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட ஆந்திரா பக்தர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது ஆந்திரா பக்தர்களுக்கும், போலீசருக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினர். கைகலப்பு சம்பவத்தினால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து