முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      விளையாட்டு
KL Ragul 2025-07-27

Source: provided

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் டாஸில் தோற்றது. அதாவது இந்திய அணி கடைசியாக கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸில் வெற்றி கண்டிருந்தது. அதன்பிறகு நடைபெற்ற 20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக டாஸை இழந்தது. இந்த தொடர் தோல்விகளுக்கு கே.எல். ராகுல் இந்த போட்டியில் டாஸ் வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி டாஸை வென்றுள்ளது.

______________________________________________________________________________________________

இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. முன்னதாக 2 முறை சாம்பியனான இந்தியா, 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த கால் இறுதி போட்டியில் சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.  

______________________________________________________________________________________________

இந்திய வீராங்கனை சஸ்பெண்ட்

இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது மூன்றாவது டோப்பிங் வயலேஷன் ஆகும். இது அவரது 20 ஆண்டுகால கேரியருக்கு பெரும் பின்னடைவு ஆகும். 

அவரது பயிற்சியாளரும் தடைசெய்யப்பட்ட பொருள்களை விநியோகித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரியானாவைச் சேர்ந்த 42 வயதான சீமா புனியா 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் சாம்பியன் ஆவார். காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கம் வென்று இருக்கிறார்.

______________________________________________________________________________________________

ஆஸி., வீரர் ஸ்டார்க் சாதனை

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை ஸ்டார்க் படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000 ரன்கள் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் ஸ்டார்க் (1003) உள்ளார். 1020 ரன்களுடன் கம்மின்ஸ் 8-வது இடத்தில் உள்ளார்.

முதல் 7 இடங்கள் முறையே ஸ்மித் (4358), மார்னஸ் லெபுஷன் (4350), டிராவிஸ் ஹெட் (3477), கவாஜா (3290), டேவிட் வார்னர் (2423), அலெக்ஸ் கேரி (2099), கேமரூன் கிரீன் (1634) ஆகியோர் உள்ளனர். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்சில்  அதிக ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களில் ஸ்டார்க் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 51 போட்டிகளில் 1003 ரன்கள் 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் 4 இடங்களில் அஸ்வின், ஜடேஜா, பேட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர். 

______________________________________________________________________________________________

தமிழக வீரர் வேலவன் ‘சாம்பியன்’

எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஆடம் ஹவாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் டெல்லியை சேர்ந்த 17 வயது வீராங்கனையான அனாஹத் சிங் 11-8, 11-13, 11-13, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் தமிழகத்தின் 39 வயது ஜோஸ்னா சின்னப்பாவை போராடி சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

______________________________________________________________________________________________

பேசுபொருளான மந்தனா செயல்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' தற்போது இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல், ஸ்மிருதியை மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு அழைத்துச் சென்று, சினிமா பாணியில் காதலைச் சொன்ன வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது நீக்கிவிட்டார். 

திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது. இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.அதில் இன்ஸ்டாகிராமில் அவர் விளம்பரா வீடியோ வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவன விளம்பரத்தில் நடித்து வீடியோ வெளியிட்டுள்ள ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை. இது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் இந்த விளம்பரம் திருமணத்திற்கு முன்பு படமாக்கப்பட்டதா என்பதும் முழுமையாக தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து